இந்த தேதியில் தான் உதயநிதி துணை முதல்வர் பதவியின் அரியணை.. உண்மையை போட்டுடைத்த திமுக அமைச்சர்!!

0
223
It is on this date that the throne of Udayanidhi Deputy Chief Minister.. The DMK Minister who revealed the truth!!
It is on this date that the throne of Udayanidhi Deputy Chief Minister.. The DMK Minister who revealed the truth!!

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நாளிலிருந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு எப்பொழுது வருவார் என்ற பேச்சுவார்த்தை தான் அதிகளவு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் சில மூத்த அமைச்சர்கள் உதயநிதி அமைச்சர் பதவியில் உட்காருவதை விரும்பவில்லை. இருப்பினும் மாவட்ட செயலாளர்கள் எனத் தொடங்கி குறிப்பிட்ட சில அமைச்சர்கள் வரை பலரும் உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு வருவதை ஆதரித்து வருகின்றனர். இதனை நாம் மக்களவைத் தேர்தல் முடிந்து எம்பி பதவியேற்பு விழாவிலே கண்கூட பார்க்க முடிந்தது.

அந்த வகையில் சமீபத்தில் கூட இது குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பொழுது, உதயநிதி துணை முதல்வராகும் கோரிக்கை வலுத்துள்ளதே தவிர்த்து பழுக்கவில்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்குள்ளேயே உதயநிதி துணை முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்று எண்ணி வருகிறார். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என அடுத்தடுத்து சட்ட ஒழுங்கு சீர்கேடு அரங்கேறியதால் உதயநிதியின் துணை முதல்வர் பதவி தள்ளி போக நேரிட்டது.

ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலம் இதற்கான விடை இன்று கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைப்பதற்காக ராமனதாபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், ஸ்டாலின் பற்றி புகழாரம் சூட்டியதும் உதயநிதி குறித்து பேச ஆரம்பித்தார். அப்பொழுது அமைச்சர் உதயநிதி என்று கூறுவதற்கு பதிலாக துணை முதல்வர் உதயநிதி என்று கூறினார். இவர் அவ்வாறு கூறியதும் அங்கிருந்த அரங்கத்தில் உள்ளவர்கள் திகைத்துப் போய் பார்த்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், சாரி சாரி வரும் 19ஆம் தேதி க்கு பிறகுதான் அவ்வாறு சொல்ல வேண்டும் என்று கூறி மேடையில் மழுப்ப ஆரம்பித்தார். இதிலிருந்து தெரிய வருகிறது ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்பாகவே உதயநிதி துணை முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டு விடுவார். தற்பொழுது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியது அரசியல் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.

Previous articleஎனது வழியில் குறுக்கிடிகிறார்.. இது நன்றாக இல்லை!! கம்பீருக்கு வார்னிங் கொடுக்கும் ரோஹித் சர்மா!!
Next articleFLASH: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!