“மக்களை காக்க பிடிக்கும் திமுக”.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலை வெல்ல முதல்வர் போட்ட ஸ்கெட்ச்!!

Photo of author

By Rupa

TVK DMK: சட்டமன்ற தேர்தலில் வெற்றபெற வேண்டுமென்பதற்காக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் வழக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்.

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அறிக்கைகளை மக்களை கவர வெளியிட்டது. இதில் குடும்ப அட்டை உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தது. இவ்வாறு இருக்கையில் ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டுகள் கழித்து தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியது.ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்தும் எந்த ஒரு பயனுமில்லை. குறிப்பாக இதற்கென்று தனி விதிமுறைகளை அம்ல்படுத்தியதால் பெரும்பாலான பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் இதற்கென்று சரியான வழிக்காட்டுதல்களும் வகுக்காத நிலையில் பலர் தகுதி வாயிந்தும் இந்த பணம் கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் பொதுமக்கள் மற்றும் எதிர் கட்சியினர் என அனைவரும் இந்த திட்டம் குறித்த கட்டமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்ததன் பெயரில் மீண்டும் அதன் விதிமுறைகளை மாற்றி துப்புரவு பணியாளர்களின் மனைவிகள் எனத்தொடங்கி மறுவாழ்வு மையத்திலிருக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகும் என கூறினர்.

தற்பொழுது ஓராண்டு காலத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதுமட்டுமின்றி விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சி மேலும் கொள்கை கோட்பாடுகள் என அனைத்தும் திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்யும் வகையில் உள்ளது. மேலும் மக்களுக்கும் திமுக அரசியல் மீது கடும் கோவமுள்ளதால் மாற்று அரசியல் நோக்கி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இச்சமயத்தில் தான் மீண்டும் திமுக-வானது மக்களிடையே குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் கட்டாயம் ரூ ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆட்சியை பறிக்கொடுத்து விடுவோம் என்ற எண்ணத்தில் தற்பொழுது மக்களை கவர இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.