ADMK DMK: முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் முக்கியஸ்தரான வைத்தியலிங்கத்தை தங்கள்பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ், ஓபிஎஸ்-சசிகலா தரப்புகள் மும்முனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட அதிகாரப்போர் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக தொடர்ச்சியாக தேர்தல் தோல்களின் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கட்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஓபிஎஸ், பாஜக, சசிகலா உள்ளிட்டோர் அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்தால்தான் வெற்றி சாத்தியம் என வலியுறுத்தினாலும், இபிஎஸ் அதற்குத் திடுக்கிடும் பதிலாக, ஒருங்கிணைப்பு குறித்து பேசினாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், திமுகவில் மனோஜ் பாண்டியன் இணைந்தது தென் மாவட்டங்களில் திமுகவுக்கு வலுவாக அமைந்துள்ளது. இப்போது திமுகவின் அடுத்த குறிக்கோள் ஓபிஎஸ் அணியின் வைத்தியலிங்கம் தானாம். இவரை திமுகவில் இணைக்க வேண்டுமென பெரும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சமீபத்தில் வைத்தியலிங்கம் ஓபிஎஸ் சார்ந்த எந்தக் கட்சி நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்க பார்க்க வைக்கிறது.
மேலும் திமுகவில் உள்நுழைய சில விதிமுறைகள் இருப்பதாகவும், அது ரீதியான பேச்சு வார்த்தை முடிந்ததும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக முந்துவதற்கு முன் சசிகலா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

