வானதிக்கு அடித்த ஆப்பர்.. அடுத்த மாநில தலைவர் இவர் தான்!! அண்ணாமலைக்கு கட்சி தலைமை வைத்த செக்!!

Photo of author

By Rupa

BJP: தமிழக பாஜகவில் ஒவ்வொரு மாநில தலைவரின் பதவியானது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தின் மாநில தலைவரின் பதவி நியமனம் இந்த வருடத்துடன் முடிவடைய உள்ளது. அண்ணாமலை மேற்கொண்டு ஒரு ஆண்டு பதவியில் இருக்கும் அவகாசம் இருந்தாலும் அதனை தலைமை தான் அறிவிக்க வேண்டும். அரசியல் கல நிலவரப்படி அதிமுக கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான்.

இதனை உட் கட்சி நிர்வாகிகளே ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெற முடியவில்லை. இப்படியே சென்றால் பாஜக சரிய வேண்டிய நிலை வந்துவிடும் என்பதால் தலைமை அண்ணாமலைக்கு பல கண்டிஷன்களை போட்டது. அதன்படி வெளிநாட்ட்டில் படிப்பு முடித்து வந்ததிலிருந்து அதிமுக குறித்து அண்ணாமலை வாய் திறப்பதில்லை. இவ்வாறு இருக்கையில் அண்ணாமலைக்கு மாற்றாக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அந்த பதவிக்காக காத்திருக்கின்றனர்.

இதில் யாரேனும் தமிழக பாஜக தலைவராக அமரும் பொழுது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க சாதகமாக இருக்கும். தற்பொழுது தமிழக பாஜகவின் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்துள்ள வேளையில் அடுத்து மாநில தலைவர் பதவிக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாநில தலைவர் பதவியில் வானதி சீனிவாசன் வர அதிக வாய்ப்புள்ளதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர். அப்படி பார்க்கையில் அண்ணாமலை மற்றும் வானதீ சீனிவாசன் இருவருக்குமிடையே தான் போட்டி காணப்படும்.