TVK ADMK: கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வெளியே தலைக்காட்டவே இல்லை. இதனிடையே ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இனி விஜய் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆளும் கட்சி காட்டமாக விதித்து வந்தது. இவையனைத்தையும் தகர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு விஜய் திரும்பியுள்ளார்.
அந்த வகையில் இவரின் இக்கட்டான சூழலில் இவருக்காக அதிமுக துணை நின்று பேசியது. மீண்டும் இவர்களது கூட்டணி உறுதியாகும் என கூறினர். அதற்கு தான் எடப்பாடி அடியெடுத்தும் வைத்தார். ஆனால் அவையெல்லாம் வீணாகி போனது. இந்த சூழலில் தான் விஜய் தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி கோட்டையாக இருக்கும் சேலம் மாவட்டத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறாராம். கடந்த ஐந்தாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவை காரசாரமாக விமர்சித்திருப்பார்.
அந்த பொதுக்குழு கூட்டம் முடிந்த உடனேயே தனது நெருங்கிய புள்ளியிடம் சேலத்தில் தான் அடுத்த சுற்றுப்பயணம் எனக் கூறியுள்ளாராம். இது ரீதியான அனுமதி வாங்குதல் இடம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை தற்போதையிலிருந்து ஆரம்பித்துள்ளார்களாம். ஒரு சில மாதங்களில் விஜய் சேலத்திலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என கூறுகின்றனர். அன்று எடப்பாடிக்கு எதிராக அவர் களத்திலேயே பேசுவாரா என்பதே பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

