விஜய் தலையில் இறங்கிய இடி.. சுக்குநூறான அரசியல் கணக்கு!! மண்ணை கவ்விய PK!!

0
294
It is said that Vijay's political account will be wrong because PK lost the Bihar election
It is said that Vijay's political account will be wrong because PK lost the Bihar election

TVK: பீகாரின் சட்டமன்ற தேர்தலின் முடிவானது பாஜகவிற்கு சாதகமாக தான் அமையும் என்று தெரிந்திருந்தாலும் மற்றொரு பக்கம் பிரசாந்த் கிஷோர் இருந்ததால் முடிவுகள் குறித்து சற்று எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பீகார் முடிவு குறித்து விஜய்யை மதிப்பீட்டு விடலாம் என பலரும் எண்ணியிருந்தனர். இவையனைத்தும் தற்போது பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

ஒரு தொகுதியில் வருவதே சற்று கடினம்தான். என்னதான் புதியதாக வந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் ஆரம்ப கட்டத்திலிருந்து புழக்கத்தில் உள்ள கட்சிக்குதான் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் பீகாரின் பெண்கள் தான் அதிகளவு பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் தான் வெற்றியடைந்துள்ளது. தேர்தலில் வியூக மன்னனாக வலம் வந்தவர் பிரசாந்த் கிஷோர் அவருக்கே தனது கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அடிமட்ட நிர்வாகிகளிடம் தொடங்கி, சாதிவார வாக்குகள் என அனைத்திலும் இவர் பக்கம் ஆதரவு கிடையாது. இதே நிலையை தான் விஜய்யும் தமிழகத்தில் சந்திக்க கூடும். மக்கள் ஆரம்ப கட்டத்திலிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பர். அந்த வகையில் சாதிவாரிய ஓட்டு, நிர்வாகிகள் செயல்பாடு என எதுவும் விஜய்க்கு கை கொடுக்காது என்று கணக்கிடுகின்றனர். இதை வைத்து விஜய் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை கவனமாக நகரத்தினால் மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்வாக முடியும்.

Previous articleபாமகவில் எல்லாமே நான் தான்.. பரபரப்பை கிளப்பி விட்ட அன்புமணி!! ஷாக்கில் ராமதாஸ்!!
Next articleகூட்டணிக்காக தேமுதிகவிடம் மன்றாடும் அதிமுக.. தப்பு எங்க மேல தான்!! ஒப்பு கொண்ட அதிமுக அமைச்சர்!!