கலெக்டரிடம்  மக்கள் கொடுத்த  மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த  அவலம்!!

Photo of author

By Sakthi

SALEM:சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்.

தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது  அலச்சிய மற்ற  செயல் சேலத்தில் நடந்துள்ளது.

அதாவது, சேலம் மாவட்டம் அரசநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் காந்திமதி ,மருதாம்பாள் மற்றும் தென்னங்குடிபாளையம் சேர்ந்த  ஆத்தூர்  காங்கிரஸ் கட்சி செயலாளர் சுந்தரம். இவர்கள் கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா போன்ற குறைகளை தீர்க்க கோரிக்கை மனுக்களை சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் பொது கொடுத்து இருக்கிறார்கள்.

இவர்களது மனுக்கள் மீது மனு எண் மற்றும் அரசு சீல் வைக்கப்பட்டு ஆத்தூர் பி.டி .ஓ.க்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தான் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் இவர்களது  சீல் வைத்த  மனுக்கள் கிடந்துள்ளது. இதனை (நவம்பர்-10) வீராசாமி என்ற நபர் பார்த்துள்ளார். மேலும்  மனுக்களில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டுள்ளார்.

தங்களது மனுக்களை பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்துள்ளது என்பதை  அறிந்து மனுதாரர்கள்  அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  இதனை  மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் தெரிவிக்க இன்று (நவம்பர்-11) மனு தாரர்கள் சேலம் கலெக்டர் ஆபீசில் செல்ல இருக்கிறார்கள்.  பொது மக்கள் வழங்கிய  மனுக்கள் இரண்டு நாட்களுக்குள் குப்பையில் கிடந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது போன்ற செயல்கள் மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகள் மீது உள்ள நம்பிக்கையை சீர்  குலைக்கும்.