சிலருக்கு உடல் ஒல்லியாக இருந்தாலும் கழுத்து பகுதியில் மட்டும் சதை தொங்கி காணப்படும்.இது முக அழகையே கெடுத்துவிடும் விதமாக இருக்கிறது.உடல் நலன் மற்றும் அழகில் அக்கறை செலுத்த விரும்புபவர்கள் நிச்சயம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
கழுத்துப் பகுதியில் எக்ஸ்ட்ரா சதை தொங்கினால் முகத்தில் என்ன மேக்கப் போட்டாலும் அவை அழகையே கெடுத்துவிடும்.கழுத்து பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் தான் எக்ஸ்ட்ரா சதை தொங்குகிறது.
ஓபிசிட்டி பிரச்சனை இருந்தால் கழுத்தில் சதை தொங்கும்.உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு கழுத்து பகுதியில் சதை தொங்கும்.
கழுத்து பகுதியில் எக்ஸ்ட்ரா சதை தொங்க காரணங்கள்:
1)தைராய்டு பாதிப்பு
2)ஹார்மோன் பிரச்சனை
3)உடல் பருமன்
4)இதயம் தொடர்பான பிரச்சனை
கழுத்து பகுதியில் எக்ஸ்ட்ரா சதை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை:
*ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.பாக்கெட்டுகளில் அடைத்து விற்க்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
*எண்ணெய் உணவுகள்,ஜங்க் புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கழுத்து சதையை குறைக்க என்ன செய்யலாம்?
*தினமும் ஒரு கிளாஸ் க்ரீன் டீ செய்து பருகி வந்தால் கழுத்து பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா சதை குறையும்.
*இஞ்சி,பூண்டு போன்றவற்றை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தால் கழுத்து சதை குறையும்.
*தேங்காய் எண்ணெய் கொண்டு கழுத்து பகுதியை மசாஜ் செய்து வந்தால் தேவையற்ற சதைகள் குறையும்.
*தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகி வந்தால் கழுத்து பகுதியில் உள்ள சதை குறையும்.
*அடிக்கடி பூசணி உணவுகளை சாப்பிட்டு வந்தால் கழுத்து கொழுப்பு வேகமாக குறைந்துவிடும்.
*ஆளிவிதை பானம் பருகி வந்தால் கழுத்து பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.
*கற்றாழை மடலில் இருந்து ஜெல் எடுத்துஜூஸாக அரைத்து பருகி வந்தால் கழுத்து பகுதியில் உள்ள சதை குறையும்.
*தினம் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் செய்து பருகி வந்தால் கழுத்து சதை வேகமாக குறையும்.