ஸ்டாலினின் குடும்பத்தினர் மீது கை வைத்த வருமான வரித்துறையினர்! தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு!

0
160

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தேர்தல் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித் துறையினரின் உதவியோடு பல இடங்களில் பல அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.

அதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பல முக்கிய தலைவர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று இருக்கிறது.இந்த நிலையில், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகள் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கின்ற நிலையில், வருமானவரித் துறையினர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று பாரபட்சம் இல்லாமல் தொடர்ச்சியாக சோதனை செய்து வருகிறார்கள்.இந்த சூழ்நிலையில், ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவருடைய மருமகன் சபரீசன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை நீலாங்கரையில் இருக்கின்ற செந்தாமரை அவர்களின் இல்லத்தில் அவர்களின் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள். இதற்கு முன்னரே திமுகவின் வேட்பாளர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.அதோடு பலகோடிரூபாய் வருமானம் மறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் , ஸ்டாலினின் மகள் மற்றும் மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது திமுக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.