வாத்தி ரைடு! கமல்ஹாசனின் சோலியை முடித்த மத்திய அரசு!

0
122

தற்போது தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் ஆங்காங்கே வருமானவரித்துறை சோதனை, அதேபோல தேர்தல் பறக்கும் படை சோதனை, என்று பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் வீட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமான வரி துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல தஞ்சாவூர் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இருந்த கமல்ஹாசனின் வாகனம் நிறுத்தப்பட்டு தேர்தல் பறக்கும் படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது திருச்சியில் செப்கோ என்ற நிறுவனம் தொடர்பான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் ரூபாய் 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. திருச்சி செப்கோ நிறுவனம் தொடர்பான பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.இந்த சோதனையின் முடிவில் செப்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இதுவரையில் ரூபாய் 10 கோடி வரையில் பறிமுதல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு செப்கோ நிறுவன உரிமையாளர் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு மிக நெருங்கிய தோழர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பயன்படுத்திய ஹெலிகாப்டர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்த வேட்பாளரை பின் தொடர்ந்து இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.அதோடு சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் போன்றவற்றை கருத்தில் வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு இங்கே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கத்திற்கு உண்மையிலேயே உரிமையாளர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்தானா அல்லது கமல்ஹாசன் பினாமி பெயரில் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தாரா என்பது தொடர்பான விசாரணையை வருமானவரித் துறையினர் தீவிர படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு இந்த இடத்திலிருந்து தொடங்கப்படும் வருமானவரித்துறை விசாரணையானது இந்த விசாரணையின் முக்கியத்துவத்தைப் பொறுத்து படிப்படியாக கமல்ஹாசனை நேரடியாக விசாரிக்கவும் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த வருமான வரித்துறை சோதனையானது ஒருவேளை கமலஹாசனின் நெருங்கினால் தற்போது அந்த சோதனையானது கமல்ஹாசனுக்கு எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் திமுக கமல்ஹாசனை எப்படியாவது தன்னுடைய கூட்டணியில் ஐக்கியமாகி விடலாம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் திமுகவின் எந்த முயற்சியும் கமலஹாசனிடம் எடுபடவில்லை அதனால் திமுக தலைமையும் கமல்ஹாசன் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

அதோடு பாரதிய ஜனதா கட்சி தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவை வைத்துதான் கால்பதிக்க இருக்கிறது. ஆகவே தன்னுடைய தோழமைக் கட்சியான அதிமுகவை விமர்சனம் செய்ததில் பாஜகவும் கமல்ஹாசன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.இப்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து காட்சிகளையும் பகைத்துக்கொண்டிருந்த கமலஹாசன் அவர்களுக்கு தற்சமயம் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வைத்த செக் தான் இந்த வருமான வரித்துறை சோதனை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் கமல்ஹாசன் சற்றே அதிர்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.