அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்!
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில்சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர்உத்தரவிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது.
அந்த பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெரும் வகையில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்.
அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ,மாணவிகளுக்கு ஏற்றவாறு கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனால் அங்கு பரபரப்பு நிலவி காணப்பட்டது.