மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

Photo of author

By Savitha

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்ற முடிவு.

இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகளை கொடுக்கும் முன்னோடி முடிவு என பிரதமர் மோதி பாராட்டு.

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் இனி எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரதமர் மோதி இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகள் வழங்கும் முன்னோடியான முடிவு என பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளின் ஒரு அங்கமே இந்த நடவடிக்கை என பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.