இனி வரும் காலங்களில் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக இருக்குமாம்!! எப்படினு தெரிஞ்சுக்கோங்க!!

Photo of author

By CineDesk

இனி வரும் காலங்களில் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக இருக்குமாம்!! எப்படினு தெரிஞ்சுக்கோங்க!!

உங்களிடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு நாள் என்பது எத்தனை மணி நேரம் என்று கேட்டாள் அதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? கண்டிப்பாக நாம் அனைவருமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று தான் கூறுவோம். ஆமாம் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் தான். ஆனால் இன்னும் பல மில்லியன் வருடங்களுக்கு பிறகு துல்லியமாக கூற வேண்டுமென்றால் இன்னும் 125 இல் இருந்து 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமியில் ஒரு நாள் என்பது எவ்வளவு மணி நேரமாக இருக்கும் தெரியுமா? 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இந்த பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வருடத்திலிருந்து டைனோசர் வாழ்ந்து கொண்டிருந்த அந்த காலத்திற்கு சென்றால் அந்த காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 23 மணி நேரமாகத் தான் இருந்ததாம். ஆனால் தற்போது அது 24 மணி நேரமாக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் 200 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக மாறும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமாக பூமி சுழலும் வேகம் குறைந்துகொண்டே வருவதால் தான் இப்படி காலதாமதத்திற்கு காரணம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த பூமியின் சுழலும் வேகம் குறைய காரணம் நிலா கடலின் அலை மட்டத்தை மேலும் கீழுமாக ஏற்றி இறக்குவது தான் இதற்கு காரணமாம். அதுமட்டுமின்றி பூமியில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காற்றின் வேகம் போன்ற பல நிகழ்வுகள் தான் பூமியின் எடையில் அதிக அளவு தாக்கங்களை ஏற்படுத்தி பூமியில் பல மாற்றங்களை உருவாக்கி 200 மில்லியன் வருடத்திற்கு பிறகு  வரும் நாட்களில் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக மாற காரணம் என்று கூறுகின்றனர்.