ரேஷன் அட்டை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பயனடைந்து வரும் நிலையில் மாதம் தோறும் பொது விநியோகம் மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி எனத் தொடங்கி பருப்பு பாமாயில் என அனைத்தையும் மலிவு விலையில் வழங்குகின்றனர். இது பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தது முதல் பருப்பு பாமாயில் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சி என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொது மக்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பருப்பு பாமாயில் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஏப்ரல் மே என இரண்டு மாதத்திற்கான பொருட்களானது ஜூன் மாதம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். அதிலும் பெற முடியாத நபர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். தற்பொழுது பருப்பு பாமாயில் ஜூலை மாதமும் வாங்காத நபர்கள் இம்மாதம் இறுதிக்குள் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் தொடர்ந்து 3 மாதத்திற்கு மேலாக ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் கட்டாயம் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு புதிய பயானளிகள் அவர்கள் இடத்திற்கு நிரப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.இனி அனைத்து மாதத்திற்கான பொருட்களும் சரிவர வாங்கினால் மட்டுமே ரேஷன் அட்டை செல்லுபடியாகும்.