கேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கண்டிப்பாக கனமழை பொழியும்! அதுவும் ஆரஞ்சு எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இருந்து இன்று முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதிலும் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதவிர ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் 20 சென்டி மீட்டர் மழை பெய்தால் சிகப்பு எச்சரிக்கை, அதே ஒரு நாளில் 6 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருக்கும்.