இது ஒரு ஐந்து தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே மழை பெய்ய ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த சூழ்நிலையில், வெள்ளப் பாதிப்பு உருவானது. அந்த விதத்தில் சென்ற வருடம் எப்போதையும்விட மழையின் அளவு அதிகமாக இருந்தது. அதோடு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரையில் தொடர்ச்சியாக இருந்தது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டில் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலமான காற்று வீசக்கூடும் என்ற காரணத்தால், குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும் எனவும் வட தமிழ்நாட்டில் இரண்டு தினங்களுக்கு சமயங்களில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு பனிமூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.