நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

0
63

சென்னை டெல்லி ஏர் இந்தியா சரி வீட்டுக்கு வந்தா தான் விமானத்தில் திடீரென்ற இயந்திர கோளாறு காரணமாக, புறப்படுவது தாமதம் ஆனது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 129 சென்னை விமான நிலையத்தில் மூன்று மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தார்கள். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் தயாராக இருந்தது.அந்த விமானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம் நவநீத கிருஷ்ணன் போன்ற 129 பயணிகள் பயணம் செய்ய இருந்தார்கள்.

அனைத்து பயணிகளும் இரவு சுமார் எட்டு முப்பது மணிக்கு முன்பாகவே விமானநிலையத்திற்கு வந்து அனைத்து விதமான சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் புறப்பட தயாராக இருந்தார்கள். விமானத்தில் பயணிகள் அனைவரையும் ஏற்றுவதற்கு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரி பார்க்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து விமானம் சற்று நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் உண்டான தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் வேலைகளில் பொறியாளர்கள் இறங்கினார்கள்.

இரவு 12 மணி அளவில் அந்த விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு பயணிகள் அனைவரும் விமானத்தில் போய் அமர்ந்தார்கள் . விமானம் மூன்று மணி நேரம் தாமதமாக இரவு 12.30 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் தாமதமாக கிளம்பியது பாராளுமன்ற உறுப்பினர்கள் 29 பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்து தவிப்புக்கு ஆளானார்கள்.