காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையேயான போரில் காசா மண்ணில் வீசப்பட்டு வெடிக்காமல் புதைந்து கிடக்கும் வெடிகுண்டுகளை அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பேர். நடந்து வருகின்றது. இந்த போர் இன்னும் முடிந்த பாடில்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையேயான போரில் காசா நாடு பெரும் தாக்கத்தை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த போர் சுமார் 37 மில்லியன் டன் குப்பைகளை உருவாக்கி இருக்கின்றது. இந்த குப்பைகள் அனைத்துயைம் அகற்ற ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சுரங்க சேவையின் முன்னாள் தலைவர் பெஹர் லோதம்மர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த செய்தியாளர்களின் சந்திப்பில் “போரால் உருவான குப்பைகளில் பெரும்பாலும் வெடிக்கப்படாத வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டு இருக்கின்றது.
போர் தொடங்கிய பின்னர் ஏழு மாதங்கள் காசாவில் ஒரு சதுர மீட்டர் நிலத்தில் சுமார் 300 இடிபாடுகள் இருந்தது. போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது குறைந்தது 10 சதவீத வெடிகுண்டுகள் வந்து வெடிக்காமல் போகும். இதை வைத்து கணக்கிடும் பொழுது காசாவின் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு சுமார் 14 ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால் வருத்தம் என்னவென்றால் இன்னும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையே போர் நிலவிக் கெண்டிருக்கின்றது. இதனால் காசாவில் மொத்த இடிபாடுகளில் சிக்கியிருக்கும் வெடிகுண்டுகளை அகற்றுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது” என்று அவர் கூறினார்.