நடிகர் சிவாஜி கணேசனும் இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து வேலை பார்த்த ஒரே திரைப்படம் முதல் மரியாதை. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு படத்திற்கும் வெளியாகும் முன்பாக வரக்கூடிய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இந்த திரைப்படத்திற்கும் வந்துள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படம் சுத்தமாக ஓடவே ஓடாது என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த அன்னக்கிளி பட கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் கூறியிருப்பதாவது :-
முதலில் முதல் மரியாதை திரைப்படமானது தயாரிக்கப்பட்டு அனைவரின் பார்வையிலும் பார்த்த பொழுது ரஜினி அவர்கள் இந்த படம் குருட்டு அதிஷ்டத்தில் கூட ஓடாது என சொல்லி இருக்கிறார். ஆனால் பாரதிராஜாவோ தன்னிடம் தைரியமாக இரு ஐயா இந்த படம் கண்டிப்பா வெற்றி பெறும் என தெரிவித்ததாக செல்வராஜ் கூறியிருக்கிறார். அதன்பின் இந்த திரைப்படத்தை திருச்சி மாய்ஸ் தியேட்டர் ஓனர் ராமசாமி பார்த்த பின்பு திருச்சி மற்றும் தஞ்சாவூர் இரண்டுக்கும் விநியோக உரிமையை வாங்கிக் கொண்டதாகவும் அதன் பின் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எந்த நம்பிக்கையில் இந்த திரைப்படம் குருட்டு அதிர்ஷ்டத்தில் கூட ஓடாது என கூறினார் என்பது தனக்கு புரியவில்லை என்றும் ஆரம்பத்தில் பாரதிராஜா அவர்கள் சிவாஜிகணேசனுக்கு ஷார்ட் வைக்கும் பொழுது இங்கு நில்லுங்க இப்படி பாருங்க என்று மட்டுமே தெரிவித்ததாகவும் அதனை மறக்காமல் சிவாஜி கணேசன் அவர்களும் செய்ததாகவும் கூறியிருக்கிறார். அதன்பின் திரைப்படத்தை பார்க்கும் பொழுது தான் சிவாஜிகணேசன் அவர்கள் எதற்காக தன்னை பார்பி ராஜா இவ்வாறு செய்ய சொன்னார் என்பது புரிய வந்ததாகவும் கூறியிருக்கிறார்.