+2 துணைத்தேர்வுக்கு ITI மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

+2 துணைத்தேர்வுக்கு ITI மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

CineDesk

ITI students can also apply for +2 supplementary exam!! School education announcement!!

+2 துணைத்தேர்வுக்கு ITI மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26  துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதனால் வரும் கல்வியாண்டிலேயே மேற்படிப்பு படிக்க முடியும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே மே 15ம் முதல் மே 17ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் ஜூன் 19ம் தேதி தொடங்கும் துணைத்தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு மே 11ம்  தேதி முதல் இன்று மே 17ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வகுப்பு முடித்து ITI பயின்ற மாணவர்கள், 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வுகள் எழுத சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.