ஐடிஐ மாணவர்களுக்கு இனி மின் வாரியத்தில் வேலை கிடையாது :! டி என் இ பி அதிர்ச்சி தகவல்

0
131

ஐடிஐ படித்த மாணவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்கள் மின்வாரியத்தில் இனி வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மாவட்ட அளவிலான மின்வாரிய பொறியாளரிடம் வெளியிட்ட அறிக்கையில் , ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் இனி வேலை கிடையாது என்றும் , மின்வாரிய துறையில் ஹெல்பர் மற்றும் வயர் மேன் உள்ளிட காலி இடங்களை நிரப்புவதற்கு தனியார் மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்றும், இதனால் தனியார் மூலமாக நிரப்பும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 12 ,380 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் , வருடத்திற்கு ஒருமுறை 5 % ஊதிய உயர்வு வழங்க இருப்பதாகவும், பணியில் உள்ளவர்கள் 3 வருடத்திற்கு மேல் பணியாற்ற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வருடம் கூடுதலாக பணி நியமனம் செய்ய அந்த அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ஐடிஐ படித்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின்வாரிய தொழிற்சங்கத்தினரிடம் , படித்த மாணவர்களை நேரடியாக பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தனியரிடம் மின்வாரியத்துறை விடும் செயல் வேண்டாம் என்ற கோரிக்கையும் எழுந்த வண்ணம் உள்ளது.

Previous articleதிருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் குற்றமில்லை :! நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு
Next articleஅரசு ஊழியர்களிடம் நடத்தப்படும் திடீர் சோதனை :! அச்சத்தில் அரசு ஊழியர்கள்