இந்த Android Phone வைத்திருந்தால் பெரும் ஆபத்து!! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!!

Photo of author

By Divya

இந்த Android Phone வைத்திருந்தால் பெரும் ஆபத்து!! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!!

இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In) மூலம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது.பல மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மிகவும் மோசமான பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கத்திடமிருந்தே நேரடியாக எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.

இந்த அதிக தீவிர எச்சரிக்கை எச்சரிக்கை பயனர்களுக்கு மட்டுமல்ல பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் கவலையளிக்கும் செயலாக இருக்கின்றது.கடந்த ஆகஸ்ட் 7 அன்று வெளியான எச்சரிக்கை செய்தியில் ஆண்ட்ராய்டு 12,ஆண்ட்ராய்டு 12 எல்,ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆண்ட்ராய்டு 14 இல் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன் சாதனங்களும் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு சிக்கல் மிகவும் தீவிரமான ஒன்றாக உள்ளது.இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசர்களின் முக்கியமான தகவல்களை மோசடிக்காரர்கள் அல்லது ஹேக்கர்கள் அணுகுவதற்கு வழிவகை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் ஆண்ட்ராய்டு போனில் தன்னிச்சையான குறியீட்டை இயக்கவும் இது அனுமதிக்கலாம் என்ற அதன் தீவிரத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்த புதிய பாதிப்புகள் ஃபிரேம்வொர்க்,சிஸ்டம்,கர்னல்,ஆர்ம் காம்போனென்ட்ஸ், இமேஜினேஷன் டெக்னாலஜீஸ்,மீடியாடெக் கூறுகள்,குவால்காம் காம்போனென்ட்ஸ் போன்ற பல்வேறு கூறுகளில் உள்ள சிக்கல்களால் உருவாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

சாம்சங்,ரியல்மி,ஒன்பிளஸ்,சியோமி,விவோ போன்ற பிராண்டுகள் குறிப்பிடப்பட்ட சிப் தயாரிப்பாளர்களை நம்பியிருப்பதால் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் அந்நிறுவனங்கள் உடனடியாக புதிய அப்டேட்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்ட்ராய்டு போன் யூசர்கள் புதிய அப்டேட்டை பதிவிறக்கம் செய்வதன் மூலம் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.