‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவிங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு!

0
46

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு!

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘அஜித் குமார்’.இவர் தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் கடைசியாக நடித்த படம் ‘துணிவு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது.ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழும் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.ஆனால் தற்பொழுது பாலிவுட் ஹீரோயின் ‘ஹூமா குரேஷி’ அஜித்துக்கு ஜோடியாகிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹூமா குரேஷி தமிழில் காலா,வலிமை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இந்நிலையில் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் அவர்களுக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது என்றும் படப்பிடிப்பு துபாய் மற்றும் அபுதாபியில் நடக்க இருப்பதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் அஜித் ரசிகர்கள் உற்ச்சாகத்தில் இருக்கின்றனர்.