இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!

Photo of author

By Hasini

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்திருப்பதால், அதன் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்காக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்றும், அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், விருப்பமிருப்பவர்கள் வரலாம் மற்றவர்கள் வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் கல்வி கற்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு காலம் செப் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் சொன்னபடியே ஒன்றாம் தேதி முதல் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அதற்கான தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை விரிவாக அனுப்பி வைத்துள்ளனர். அதை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வரும் 1ஆம் தேதி முதல் பேருந்துகளில் அணைத்து மாணவர்கள்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, பள்ளி சீருடை மற்றும் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனவும், அரசு ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போது பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி சில வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றியுள்ளது.

அதன் படி முதலில் பெண்களுக்கு இலவசம் என்று கூறிய தமிழக அரசு அதன் பிறகு மாற்றுத்திறனாளிகள் அவர்களுடன் உதவிக்கு வருபவர்கள் மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் அரசு ஐ.டி.ஐ தொழில் கல்லூரிகளில் படிப்பவர்கள் என இலவசங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் இந்த நேரத்தில்  இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பது ஏழை மக்கள் அனைவரும் வரவேற்கும் திட்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.