மறுபடியும் லாக் டவுன் போட்டுருவாங்க போலயே! நடக்கரத பார்த்தா அப்படித்தான் இருக்கு!

Photo of author

By CineDesk

மறுபடியும் லாக் டவுன் போட்டுருவாங்க போலயே! நடக்கரத பார்த்தா அப்படித்தான் இருக்கு!

CineDesk

Updated on:

It's like locking down again! Be that as it may!

மறுபடியும் லாக் டவுன் போட்டுருவாங்க போலயே! நடக்கரத பார்த்தா அப்படித்தான் இருக்கு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 அன்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்ப்போது ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நோய்தொற்றால் பல உயிரிழப்பு ஏற்ப்படட்து. மேலும் பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இந்த நோய்தொற்றின் கோரத்தாண்டவத்தால் உயிரிழப்பு பல லட்சத்தை எட்டியது.

இதற்காக 24 மார்ச் அன்று  21 நாட்கள் முழு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து  3 மாதம் ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ்   கட்டுப்பாட்டிற்குள் வந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நோய் பரவுதல் குறைந்ததால் தீபாவளி, பொங்கல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

அதனால் மக்களும் நோய்  பரவுவது குறைந்து விட்டதாக நினைத்து நோயின் மீதுள்ள பயம் குறைந்து  சகஜமான வாழ்விற்கு திரும்பி விட்டனர். தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சொல்ல மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மீண்டும் முக்கிய கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்றும்.  45 வயத்திற்கு மேற்பட்டவர்கள்  கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் லாக் டவுன் அமலுக்கு வந்துவிடுமா என்று மக்கள் கவலையில் உள்ளனர்.