இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்!

Photo of author

By Rupa

இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்!

நமது இந்திய நாட்டை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில்  மத்திய போக்குவரத்துத்துறை  பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான புதிய கட்டுப்பாடுகளை கிடைக்கக்கூடும் என சென்ற ஆண்டு முதலில்  மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான கட்டுப்பாடுகள் உடனடியாக ஏதும் வெளியிடப்படவில்லை.  சில மாதம் கழித்து கட்டுப்பாடுகள் அடங்கிய நகல் மட்டுமே வெளியிட்டது.அதுவும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அந்த வெளியிடப்பட்ட நகலில் 9 மாதம் முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோரியிருந்தனர். அதுமட்டுமின்றி அவ்வாறு 9மாதம் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மோட்டார் வண்டியில் அழைத்து செல்லும் போது 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் அந்த நகலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது. அந்தவகையில் குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவது மற்றும் வேக கட்டுப்பாடு போன்ற சட்டங்கள் அடுத்த வருடம் முதல் அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி நான்கு வயது குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவது மட்டுமின்றி அழைத்துச் செல்லும் மோட்டார் வண்டியில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மகிழுந்துகளில் உள்ளது போல பெல்ட் வசதியுடன் கூடிய இருக்கையும் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இவ்வாறான விதிமுறைகளை மீறி நடக்கும் மக்களிடம் ரூ 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று இந்த அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் நடப்பவர்களின் ஓட்டுனர் உரிமம் மூன்று மாதம் வரை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், தற்போதுள்ள மோட்டார் வண்டி பயணிகளை ஹெல்மெட் அணிவதை தவிர்த்து வருகின்றனர். பல்வேறு அபராதம் விதிக்கப்படும் பல இடங்களில் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கையில் குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவது எந்த அளவிற்கு சாத்தியமானது என்பது சந்தேகத்திற்குரியது தான்.