கடந்த சில வருடங்களாகவே மக்கள் அனைவரும் வெளியே கடைகளுக்கு சென்று வாங்கும் பொருட்கள் மற்றும் உணவு, உடை என பல செயல்களை வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இது மனிதர்களை சில நேரம் சோம்பலாகவும் மாற்றிவிடுகிறது.
இந்நிலையில் சீனாவில் ‘லியு’ என்ற பெண் ஆன்லைனில் ஆப்பிள் போனின் ஒரு மாடலான 12 ப்ரோ மேக்ஸ் என்ற கைபேசியை, அந்த குறிப்பிட்ட ஆப்பிள் வலைத்தளம் வளியே ஆடர் செய்துள்ளார். இதற்காக அவர் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 விலையுள்ள கைப்பேசியை பதிவு செய்துள்ளார்.
அதற்காக ஆன்லைன் மூலமாகவே முழு தொகையையும் செலுத்தியுள்ளார். அதிர்ச்சி அதற்குப் பின்பே அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்டர் செய்தது ‘ஆப்பிள் ஐபோன்’ ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது ‘ஆப்பிள் ஜூஸ்’. இச்சம்பவம் அப்பெண்ணிற்க்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் அந்த நிறுவனத்தினிடம் புகார் அளித்துள்ளார்.