சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை!. 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசும் காற்று!…

Photo of author

By அசோக்

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை!. 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசும் காற்று!…

அசோக்

rain

தமிழகத்தை பொறுத்த வரை கோடை காலத்தில் மழை என்பது குறைவாகவே இருக்கும். அதிலும், சென்னையில் வெயில் மக்களை வாட்டி அடிக்கும். இன்றுதான் அக்னி நட்சத்திரம் துவங்கியது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறரது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வட பழனி, வளசரவாக்கம், போரூட், கோயம்பேடு, மதுரவாயல், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வாருகிறது.

அதேபோல், எழும்பூர், காசி மேடு, செண்ட்ரல், பாரிமுனை, தண்டையார் பேட்டை, ராயபுரம் ,திருவொற்றியூர், பெரம்பூர் போன்ற வட சென்னை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஒருபக்கம், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிலும், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அந்த பகுதியில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.