கண் கண்ணாடி தூக்கிப் போடுவதற்கான நேரம் வந்துவிட்டது!!வெறும் 15 நிமிடத்தில் உங்கள் கண் பார்வை தெளிவாகும்!!

Photo of author

By Janani

இந்த நவீன காலத்திலும் கூட கண் கண்ணாடிகளை அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அதிலும் 40 வயதை கடந்தாலே ரீடிங் கண்ணாடியை அணிவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் 40 வயதை கடந்தவர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக ரீடிங் கண்ணாடிகளை மொத்தமாக அகற்றக் கூடிய ஒரு புதிய கண் சொட்டு மருந்துகளுக்கு ‘இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்’ இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.

உலகெங்கும் பிரஸ்போபியா பாதிப்பால் 180 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பாதிப்பினை முக்கியமாக எடுத்துக்கொண்டு தற்போது PresVu என்ற கண் சொட்டு மருந்தினை உருவாக்கியுள்ளனர்.40 வயதை கடந்தவர்களின் கண்ணாடி தேவைகளை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்து இதுவாகும்.

இந்த கண் சொட்டு மருந்து கண்ணாடி தேவைகளை நீக்குவது மட்டுமின்றி, கண்கள் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது. இந்த மருந்தினை ஆண்டு கணக்கில் பயன்படுத்தினாலும் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக என்டோட் பார்மாசூட்டிகள் நிறுவனம் கூறியுள்ளது.
பிரஸ்போபியா பாதிப்பினை காண்டாக்ட் லென்ஸ் அல்லது அறுவை சிகிச்சையின் மூலமும் தீர்க்கலாம். ஆனால் இப்போது அதெல்லாம் வேண்டாம் வெறும் ஒரு சொட்டு மருந்து மட்டுமே போதும் என்கிறது நவீன மருத்துவம்.

நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டு இந்த மருந்திற்கான ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. கண்ணில் செலுத்திய 15 நிமிடத்திலேயே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடுமாம் இந்த PresVu மருந்து. எனவே கண் குறைபாடு பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகவே திகழும் என்று கூறுகின்றனர்.

இன்னும் சில நாட்களில் இந்த சொட்டு மருந்து விற்பனைக்கு வரும். ரூ.350 க்கு இந்த சொட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.