பெண்களுக்கு அடித்த ஜாக் பார்ட் ! தமிழக அரசு வழங்கும் ஒரு லட்சம் மானியம் கிடைக்க இன்றே விண்ணப்பியுங்கள் !

Photo of author

By Vijay

தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக பல்வேறு திட்டப்பணிகளை கொண்டு வந்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய  பெண்களுக்கு என தனி பஸ் சென்னை மாநகரில் இயக்கப்படுகிறது.  பெண்களின் நலனுக்காக இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை,  தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம், புதுமைப்பெண் திட்டம் போன்ற மகளிர் நலத்திட்ட தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்

முதலமைச்சர் உத்தரவின் பெயரில்  தலைநகர் சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 “பிங்க் ஆட்டோக்கள்” இயக்கப்பட்ட உள்ளது.  இந்த ஆட்டோக்களில் பாதுகாப்புக்காக காவல்துறை எங்களுடன் இணைக்கப்பட்ட  GPS கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.  மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற  பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், கைம் பெண்கள் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  விண்ணப்பிப்பவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், 25 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.  மேற்கண்ட தகுதிகள் கொண்ட பெண்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் CNG ஆட்டோ வாங்க மானியம்  தமிழக அரசு  வழங்கும்.  தகுதியான சென்னை பெண் ஓட்டுநர்கள் தங்களது  விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு,  8-வது தளம்,  சிங்காரவேலர் மாளிகை,  சென்னை – 600 001 என்ற முகவரிக்கு                     ( 23.11.2024 ) தேதிக்குள் அனுப்ப வேண்டும்.