கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அசத்தல் உதவித்தொகை!
தமிழக அரசு பல வகைகளில் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. மாணவர்களின் உதவி தொகையை வைத்து பட்டப்படிப்பை முழுமையாக முடிக்க உதவியாக உள்ளது இந்நிலையில் பல மாணவர்கள் கல்லூரி படிப்பை பாதியிலேயே இடைநிற்றல் செய்து விடுகின்றனர்.
இதனை எல்லாம் தடுக்கவே தமிழக அரசு மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் என தனியாக பட்டியலிட்டு அந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவி தொகை பெற விண்ணப்பகங்கள் வரவேற்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் தெரிவித்துள்ளார் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கும் மாணவர்கள் வரும் 20.01.2023 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல இரண்டாம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முன்பு விண்ணப்பித்த விண்ணப்பங்களை புதுப்பித்துன் நாளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் பெற்றோர் வருட வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். http//www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.