குக் வித் கோமாளி இருவருக்கு அடித்த ஜாக் பாட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

குக் வித் கோமாளி இருவருக்கு அடித்த ஜாக் பாட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.பிக்பாஸை விட அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஷோ  தான் குக் வித் கோமாளி.இதில் வரும் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது.

அதில் முக்கியமாக மணிமேகலை,புகழ்,சிவாங்கி,பாலா ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் குக்குகளுடன் சேர்ந்து நடத்தும் நகைச்சவை அனைத்தும் வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.இது முதல் சீசனிலேயே அதிக அளவிற்கு விஜய் டிவிக்கு டி.ஆர்.பி கொடுத்தது.அதில் சிறிதளவு மாற்றம் கூட இல்லாமல் இந்த சீசனும் டிஆர்பி ஏறியுள்ளது.

போன சீசனின் குக் வித் கோமாளியின் வின்னராக அனிதா விஜயகுமார் வெற்றிபெற்றார்.அதேபோல் இந்த சீசனின் வின்னர் யார் வர போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.இந்த சீசனின் ஹை-லெட் ஆக சிவாங்கி மற்றும் அஷ்வினின் பேரை வைத்து அதிக அளவு மீம் கிரியேட்டர்கள் சம்பாதித்தனர்.அதுமட்டுமின்றி அவர்களின் ஜோடிக்கென்றே அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.

அதன்பின் சிவாங்கி மற்றும் புகழ் அண்ணன் தங்கை பாசத்தை பார்த்த அனைவருக்கும் நமக்கும் இவர் போல அண்ணன் வேண்டும்மென்று நினைக்க வைக்கும் அளவிற்கு அண்ணன் தங்கை உறவின் மூலம் பிரபலமடைந்து விட்டனர்.அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 வின் பைனலிஸ்ட் ஆகா அஸ்வின்,பாபா பாஸ்கர்,கனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.குக் வித் கோமாளியில் கனி வெற்றி பெற்றார்.

முதலில் கலகலவென ஆரம்பித்த இந்த ஷோ முடிவில் அதிக எமோஷனலாக நிறைவு பெற்றது.இந்த ஷோ முடித்த கையோடு புகழ் மற்றும் அஸ்வினுக்கு ஜாக் பாட் அடித்துவிட்டது.இவர்கள் இருவரும் அறிமுக இயக்குனரான ஹரிஹரன் படத்தில் நடிக்க  உள்ளார்களாம்.அதுமட்டுமின்றி இப்படத்தை Trident Arts தயாரிக்க உள்ளதாம்.எப்படியும் இவர்கள் காமிநேஷன் நகைச்சுவை மிக்கதாக படத்தில் இருக்கும் என கூறுகின்றனர்.இதைக்கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.மேலும் புகழ் சந்தானம் அடிக்கும் ஓர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment