தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என இரு படங்களில் நடித்துள்ளார்.

அவர் தற்போது மூன்றாவது முறையாக ‘அட்ரங்கி ரே’ என்ற பாலிவுட்டில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து  நடிக்கிறார். தற்போது உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்க உள்ளார்.

இயக்குனர் ஆனந்த் எல் ராய், அட்ரங்கி ரே படத்தில் இன்னொரு நாயகியாக டிம்பிள் ஹயாட்டிதேர்வு செய்துள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

இவர்  கல்ஃப் படத்தில் நடித்து பிரபலமானவர். மற்றும் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்திலும் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்த பின் உடனடியாக ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது படத்தில் இணைந்துள்ள தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார்.