பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!

Photo of author

By CineDesk

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் இனி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் மக்களுக்கு அவசர கால கட்டங்களில் உதவியாக இருக்கும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களை முன்கள பணியாளர்களாக அடையாளப் படுத்தபடுகின்றனர். இந்த நிலையில் மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குகிறது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அவர்கள் அயராது உழைக்கின்றனர்.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப் பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும். என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.