PM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000!

0
279
Jackpot for PM Kisan Beneficiaries! No more Rs. 6,000.. Rs. 12,000!
Jackpot for PM Kisan Beneficiaries! No more Rs. 6,000.. Rs. 12,000!

PM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000!

விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று மூன்று தவணைகளாக ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் தற்பொழுது 9.3 கோடி சிறுகுறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ரூ.6000த்தில் இருந்து ரூ.12,000 ஆக ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று விவசாய பயனாளிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 21 லட்சம் விவசாய பயனாளிகளை கிசான் திட்டத்தில் இருந்து நீக்கி விவசாயிகளுக்கு மத்திய அரசு மீது அதிருப்த்தி ஏற்பட வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.கிசான் திட்டத்தில் நீக்கப்பட்ட விவசாயிகளை மீண்டும் இணைக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் தமிழக அரசின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக திருச்சியில் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleசுங்கச்சாவடியில் உங்கள் வாகனம் நின்று விட்டால் என்னவாகும் என்று தெரியுமா? வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next article10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!