பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு
தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சென்ற ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பணம் ஏதும் வழங்கவில்லை. வெறும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை மட்டுமே வழங்கப்பட்டது.இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படுமா??
என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த ஆலோசனை முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள்,மற்றும் அதிகாரிகளுடன் நேற்று நடந்தது.
அதில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 பணமும், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இது பற்றிய அரசின் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.இதுபற்றி பேசிய அமைச்சர் ஒருவர், பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. என்ன பொருட்கள் வழங்கப்படும்.
எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதை ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறினார். இதனால் ரேசன் அட்டைதாரர் எதிர்பார்த்ததை போலவே பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பணமானது ரொக்கமாகவோ அல்லது வங்கி கணக்கிலோ செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.