வேலை இல்லாதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கெல்லாம் வாரம் ரூ 7500!

Photo of author

By Rupa

வேலை இல்லாதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கெல்லாம் வாரம் ரூ 7,500!

உலக நாடுகள் அனைத்திலும் பல கோடி மக்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதை ஈடுகட்டும் விதத்தில் ஒவ்வொரு நாட்டின் அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் படித்த இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற வேலை இன்றி இன்று வரை தவித்து வருவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் நமது இந்தியாவில் அதிகப்படியான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.பலர் சொந்த நாட்டில் வேலை இல்லாத சூழலால் அண்டை நாடுகளுக்கு சென்று வேலை செய்கின்றனர்.

அவ்வாறு  வேலையின்றி இருப்பவர்களை இந்த சமூகம் மதிப்பதும் இல்லை. வேலை இல்லாதவர்களையும்   மதிக்க வேண்டும் என்று எண்ணி அல்ஜீரியாவின் அதிபர் அப்டெல் மத்ஜீத் ஓர் அறிய சலுகையை வேலை இல்லாதவர்களுக்கு அளித்துள்ளார்.அது என்னவென்றால், வேலை இல்லாதவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வாரந்தோறும்  ரூ 7,500 இளைஞர்களுக்கு வழங்க உள்ளதாக அல்ஜீரியாவின் அதிபர் தெரிவித்துள்ளார்.

வேலை இல்லாத வர்களை தற்போதைய காலகட்டத்தில் யாரும் மதிப்பதில்லை. அவர்களையும் இந்த சமூகத்தில் மதிக்க வேண்டும் என்று எண்ணி அதிபர் இவ்வாறு சலுகை ஒன்றை கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களையும் மற்றவர்கள் வேறுபாடின்றி மதிக்க வேண்டும் என்று எண்ணி இவ்வாறான சலுகைகை அமல்படுத்தியுள்ளார்.அதனால் அல்ஜீரியாவில் வேலை இன்றி தவித்து வரும் இளைஞர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். அத்தோடு வேலை இல்லாத இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்று மற்றொரு சலுகையும் அவர்களுக்கு கூறியுள்ளார்.

அல்ஜீரியா அதிபர்  அடுத்தடுத்தாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்த அறிவிப்புகள் அனைத்தையும் இளைஞர்கள் பெருமளவு வரவேற்கின்றனர்.அதுமட்டுமின்றி வேறொரு வேலை கிடைக்கும் வரை இளைஞர்களுக்கு இந்த பணம் பெரும் உதவியாக இருக்கும்.