50 லட்ச பெண்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. மீண்டும் வருது ரூ 1000!! மக்களே ரெடியா இருங்கள்!!

Photo of author

By Rupa

50 லட்ச பெண்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. மீண்டும் வருது ரூ 1000!! மக்களே ரெடியா இருங்கள்!!

திமுக பெண்களுக்கு உரித்தான பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது அதில் ஒன்றுதான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வாழும் கலைஞர் உரிமை தொகை திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் ஆட்சியில் இருக்கும் பொழுது அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் என்று கூறிவிட்டு ஆட்சியில் அமர்ந்தவுடன் இத்திட்டம் பெறுவதற்கென்று சில நிபந்தனைகளை வெளியிட்டது.

இதன் மூலம் தகுதியானவர்கள் கூட சில காரணங்களால் நிராகரிக்க நேரிட்டது. இது குறித்து பல புகார்கள் வந்ததை எடுத்து மீண்டும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டு இத்திட்டம் மூலம் பயனாளிகள் சேர்க்கப்படுவதாக தெரிவித்திருந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நடந்ததையொட்டி இத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. தற்பொழுது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்ததை அடுத்து இம்மாதம் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுவதால் மீண்டும் இது குறித்த தகவலானது அடுத்த மாதம் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த ஒரு பொது அறிவிப்புகளும் வெளிவராது. அந்த வகையில் அடுத்த மாதம் இறுதிக்குள் இத்திட்டம் குறித்து பொது அறிவிப்பு வெளிவர பொது அறிவிப்பு வெளிவரும் என்றும் இதனால் 50 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.