ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.மக்களின் வாழ்வாதாரத்தை மீட்னும் பழிய நிளிக்கு கொண்டு வர பல நலத்திட்டங்களை அரசாங்கம் செய்து வருகிறது.இந்நிலையில் அனைத்து அரசு துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பல நத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது தமிழக அரசு, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் கடனுதவியை வழங்குவதாக பள்ளி கல்வித்துறைஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது தமிழக அரசு மிகப்பெரிய சாவல்களை நாளடைவில் சந்தித்து வருகிறது.இந்த கொரோனா தொற்று காலத்திலேயே மக்கள் ஆக்சிஜன் இன்றியும் போதுமான அளவு மருத்துவ வசதிகள் இன்றியும் அவதிப்பட்டனர்.அதனை கருத்தில் கொண்டு பல மாவட்டங்களில் மருத்துவத்தின் தரத்தை உயர்த்தினர்.அதுமட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு போதுமான அளவு இடம் வசதி மருத்துவமனைகளில் இல்லாததால்,தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய முகாம்கள் அமைத்தனர்.
அத்தோடு நேற்று திருவாரூரில் ரூ.12 கோடி செலவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் ஒன்றை முதல்வர் திறந்து வைத்தார்.அந்தவகையில் தற்போது அரசு பணி ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடனுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளனர்.இந்த கடனுதவி பயன்படுத்தி திருமணம்,கார்,பைக் போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளி இணை இயக்குனர் கூறியுள்ளார்.மேலும் இந்த கடனுதவியை ஆசிரியர்கள் மட்டுமின்றி கல்வி பணியாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.