பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. 

0
162
JACKPOT WAITING FOR SCHOOL STUDENTS!!An opportunity to show your talent!Get ready today!..
JACKPOT WAITING FOR SCHOOL STUDENTS!!An opportunity to show your talent!Get ready today!..

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பில் எண் 988. நாள் 30.10.2022  நம் தாய்த் திருதமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அச்செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி,பேச்சுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றிபெறும் மாணவ,மாணவிகளுக்கு  முதல் பரிசு ரூ.10000யும்,இரண்டாம் பரிசு ரூ.7000யும் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5000 எனவும் மேலும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் 05.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கயிருக்கின்றது.இப்போட்டிகள் நடைபெறுவதற்கான தலைப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உருவான வரலாறு,மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள்,தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள்,பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு,சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்,மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்,மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி,சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு,எல்லைப்போர்த் தியாகிகள்,முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடுஆகிய தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டிகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பெற்றுள்ளது. முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.இப்போட்டிகள் அனைத்தும்  காவல்துறை பாதுகாப்பில்  நடக்கவிருக்கிறது.

Previous articleபிரதமரிடம் தமிழில் பேசிய மதுரையைச் சார்ந்த பெண்மணி!
Next articleதெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்!