DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ 1000 தருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்த உரிமை தொகை வழங்கப்பட்டது. அதிலும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த தொகையை கொடுத்து வந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியதால் விதிமுறைகளுக்கு சில தளர்வுகளை ஏற்படுத்தியது. அதவாது கார்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த தொகை கிடைக்காமல் இருந்தது.
நாளடைவில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் முதல் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவி வரை அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க உத்தரவிட்டனர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு நிபந்தனைகளை தவிர்த்து உள்ளது. அதாவது அரசு துறைகளில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதிலும் சிறப்பு காலம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அரசின் மூலம் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும்.
மேலும் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட உதவித்தொகை பெரும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கும் இந்த உதவி தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர். அதிலும் இம்முறை வீடு தோறும் சென்று மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்கள் கைகளிலேயே விண்ணப்பம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் முகாம் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதனை சமர்பித்தால் அடுத்த ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர்.