ஊரடங்கு நேரத்தில் பாகுபலியாக மாறிய ஜடேஜா : டிரண்ட் ஆகும் வைரல் வீடியோ!

Photo of author

By Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா. நட்சத்திர ஆட்டக்காரரான ஜடேஜா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என யாரும் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வீட்டில் இருக்கும்போது பொழுது போக்காக செய்ததை வீடியோ எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகுபலி படத்தின் பாட்டிருக்கு அவர் தனது வாளை எடுத்து சுழற்றுவது போல் உள்ளது.

ரவீந்திர ஜடேஜா ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்ததால் அவர் வாளை எடுத்து சுழற்றுவது அவர்களுக்கு பெருமையான ஒன்றாகும். இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து வருவதால் தற்போது இணையதளத்தில் வேகமாக டிரண்டாகி வருகிறது.