டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்!

Photo of author

By Sakthi

7விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக, ரத்து செய்யப்பட்டடு டிராவில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து லண்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது தொடரிலும் 1 க்கு 0 என்ற என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் இருக்கின்ற ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சென்ற போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா ஒரு ரன்னிலும் கோலி7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ரோகித் சர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்கள் சேர்த்தார் .ரோகித் சர்மா மற்றும் ரஹானே உள்ளிட்டோரை தவிர்த்து மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். 40.2 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் மிக அற்புதமாக விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி விக்கெட் எதுவும் எடுக்காமல் 170 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். நேற்று ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களுக்கும் ஹசிப் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா முகமது ஷமி உள்ளிட்டோர் பிரித்தார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்தின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு வினோதமான சாதனையை ரவீந்தர் ஜடேஜா படைத்திருக்கிறார். இங்கிலாந்து இங்கே சுழற்பந்து வீச்சு எப்போதும் செயல்படாது ஆகவே கடந்த இரண்டு போட்டியில் சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இருந்தார். கடந்த இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை வேகப்பந்து வீச்சாளர்கள் தான் அனைத்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த சூழ்நிலையில்,61 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றிய பின்னர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் விக்கெட்டை எடுத்து இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று சொல்லப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவ்வளவு விக்கெட்டுக்கு பின்னர் சுழற்பந்துவீச்சாளர் கைப்பற்றியது. இல்லை இதற்கு முன்னதாக ஆயிரத்து 990 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்த பின்னர் இருபத்தி ஆறாவது விக்கெட்டை சுழற்பந்துவீச்சாளர் எடுத்தது. மிகப்பெரிய விஷயமாக இருந்தது. தற்சமயம் நேற்றைய தினம் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 61 விக்கெட்டுகளை எடுத்த பின்னரும் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.