தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! – ஜெய் ஆகாஷ் பேச்சு!

Photo of author

By Kowsalya

2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக அமைந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ் தெலுங்கு மக்களின் மத்தியில் அதிகமான பெயரை பெற்றார்.

 

தெலுங்கில் ஏகப்பட்ட படத்தில் ஜெய் ஆகாஷ் நடித்த வெற்றி பெற்றார். தமிழில் அவர்களுக்கு அவ்வளவுவாக எந்த படமும் ஓடவில்லை. ரோஜா கூட்டம், ரோஜாவனம், இனிது இனிது போன்ற படங்களில் நடித்தாரே தவிர அவருக்கு தமிழ் சினிமா உலகில் அந்த அளவிற்கு பெயர் வாங்கவில்லை.

 

வெள்ளி திரையில் வராவிட்டால் என்ன சின்னத்திரையில் வருவேன், மக்களின் மனதை கவருவேன், என்று சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார். ஜீ தமிழில் வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற நாடகத்தின் மூலம் அனைவரும் மனதையும் ஈர்த்தார் என்றே சொல்லலாம்.

 

இப்பொழுது தானே தயாரித்து நடித்த ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் பெயர் ஜெய் விஜயம் என்று வைத்துள்ளார். அந்தப் படத்தில் விழாவில் பேசிய ஜெய் ஆகாஷ் , எதற்கு இந்த படத்திற்கு ஜெய் விஜயம் என்று பெயர் வைத்தேன் என்றால் ஜெய் என்பது எனது பெயர். விஜயம் என்பது வெற்றி எனவே வெற்றி என்னை தேடி வரும் என்பதற்காக இந்த படத்தை வைத்தேன்.

 

மேலும் அவர் யாரும் என்னை ஒரு ரூபாய் ஏமாற்றினால் கூட புடிக்காது. அதனால் இந்தப் படம் இந்த கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால் இதை தானே தயாரித்து வெளியிட்டேன். இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடித்த நடிகர்கள் யாரும் இதற்காக சம்பளம் வாங்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும் இந்த படத்திற்கு அதிகமாக செலவழித்தது அந்த படத்தில் வந்த பேய்க்கு மட்டுமே. அனைவரும் படத்திலும் பேய் இருக்கும் ஆனால் இந்த படத்தில் பேயை வித்தியாசமாக காட்டியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

 

மேலும் அவர் கூறுகையில் இந்த படம் வெளிவந்த போது தியேட்டர்களில் ஓடவில்லை என்றால் என்ன? எனது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏக்யூ என்ற மொபைல் ஆப் உள்ளது. அந்த படத்தில் இந்த படத்தை பார்ப்பதற்கு வெறும் 50 ரூபாய் செலவு மட்டும் தான். எனது ரசிகர்கள் இதை பார்த்தாலே போதும் நான் போட்ட பணத்தை எடுத்து விடுவேன் என்று பேசி உள்ளார்.

இது என்ன ஆப் என்று பலரும் புலம்பி வருகின்றனர்.