ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்!

0
193

ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், திரைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாத்துறையின் மிக உயரிய விருதாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுவது ஆஸ்கார் விருதுகள். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்காக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் இறுதிபட்டியல் இன்று (பிப்ரவரி 8) வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட இந்த பட்டியலின் மீதான வாக்குப்பதிவு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த வாக்குகளின் அடிப்படையிலேயே ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படமும் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல் வெளியீட்டை ஜாக்குலின் கோலே (Jacqueline coley) என்பவர் தொகுத்து வழங்க உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த படம் ‘ஜெய்பீம்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு ஒருசிலருக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், இன்னும் நாமினேஷனே வெளியாகவில்லை. அதனால் வாக்கெடுப்பும் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் அவர் எப்படி சிறந்த படம் இதுதான் என தெரிவித்துள்ளார் என இந்த பதிவு குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Previous articleஅட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!
Next articleநீட் விலக்கு மசோதா! உப்புக்கு சப்பாணியான ஆளுநரின் காரணம் சபாநாயகர் விளாசல்!