சிறைக்கு துணையாக சென்ற துணைவி – அமெரிக்கா

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் போதைபொருள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த போதை பொருளை கடத்துவதற்காக அங்கு பல சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்படும்  கும்பல் “சினோலா கார்ட்டெல்” என்பதாகும்.

இக்கூட்டத்தின் முதன்மை தலைவனாக கருதப்படுபவர் ‘எல்சபோ’. இவர் போதைப் பொருள் கடத்தலில் மிகவும் கை தேர்ந்தவர் ஆவார். சுமார் 25 ஆண்டுகள் கொக்கைன் என்ற போதை பொருளை  கடத்துவதில் அங்கு கொடிக்கட்டி பறந்தவர், எண்ணிலடங்காத வகையில் கடத்தியுள்ளார். 

இவரை பிடிப்பதற்காக  அந்நாட்டு காவலர்கள் பலமுறை பிடிக்க சென்ற போதும் சாதுரியமாக தப்பிச் சென்றவர். ஒரு கட்டத்தில் காவலர்களிடம் பிடிப்பட்டு கொண்டு தற்போது சிறை  தண்டனையில் உள்ளார்.

அவருடைய மனைவிக்கும் அதில் பங்கு உள்ளது என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தற்போது எல்சபோவின் மனைவி ‘எம்மா அய்ஸ்ப்ரோ’ அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.