கைதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு 12 பேர் பலி?

0
161

பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் உள்ள சிறைச்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

சிறைக்குள் கடத்தி வரப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு கைதி ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றனர் இதனால் பெரும் பதற்றம் உருவானது இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது அதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கைதிகள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனினும் கைதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 12 பேர் பலியாகினர் 13 பேர் பலத்த காயமடைந்தனர் இந்த மோதலில் சிறைக்காவலர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது இதுகுறித்து அந்த நாட்டுப் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleகுழந்தைகள் ஆபாச பட விவகாரம்: திருச்சியை அடுத்து சென்னையில் கைது நடவடிக்கை
Next articleதிருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?