ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

Photo of author

By Rupa

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

Rupa

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ்க்காக சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார், ஜேக்கி ஷெரூப், மோகன்லால், சுனில், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகர் மோகன்லால் இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இன்று மதியம் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அப்போது இருந்தே ரசிகர்கள் பலரும் இந்த அறிவிப்பு ரிலீஸ் தேதியை பற்றி அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று பேசி வந்தனர். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.