ஓடிடியிலும் சாதனை படைக்க ஜெயிலர் வருகிறார்!!! ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

0
64

ஓடிடியிலும் சாதனை படைக்க ஜெயிலர் வருகிறார்!!! ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ஜேக்கி ஷெராப், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. உலக அளவில் கிட்டத்தட்ட 525 கோடி ரூபாய் வசூல் செய்து 600 கோடி ரூபாயை நோக்கி ஜெயிலர் திரைப்படம் சென்று கொண்டிருக்கின்றது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு காசோலையும் புதிய பிஎம்டபிள்யூ காரையும் பரிசாக கொடுத்தார். அதே போல திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களுக்கு காசோலையும் புதிய போர்ஷே காரையும் கலாநிதி மாறன் அவர்கள் பரிசாக அளித்தார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.