மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!!

0
51
Top 7 villains who fooled mass heroes!!
Top 7 villains who fooled mass heroes!!

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!!

திரைப்படங்களில் பொதுவாக ஹீரோக்களை தான் இயக்குனர்கள் மாஸாக காட்ட நினைப்பர். இருப்பினும் ஒரு சில படங்களில் ஹீரோக்களை மிஞ்சி வில்லன்கள் அந்த பெயரை பெற்று விடுவர்.அக்காலத்திலும் சரி தற்பொழுது வெளிவரும் இக்காலத்திலும் சரி அவ்வாறான ஒரு சில படங்கள் அமைந்து விடுகிறது. மக்களும் ஹீரோக்களை விட்டுவிட்டு அந்த படத்தின் வில்லன்களை ரசிக்க ஆரம்பித்து, அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவான கதைகளும் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக மாமன்னன் திரைப்படத்தை கூறலாம். அந்த வகையில் ஹீரோக்களையும் தாண்டி வில்லன்கள் மாசாக காட்டப்பட்ட படங்களைப் பற்றி தான் தற்பொழுது பார்க்கப் போகிறோம்.

எஸ் ஜே சூர்யா:

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஸ்பைடர். இப்படத்தின் கதாநாயகனாக மகேஷ் பாபு நடித்திருந்தார். இருப்பினும் இப்படத்தின் வில்லனாக சுடலை கதாபாத்திரம் அதாவது எஸ் ஜே சூர்யா தான் மக்கள் மனதில் பெரும்பாலும் இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி ஸ்பைடர் என்ற கூறினாலே எஸ் ஜே சூர்யாவின் அந்த வசனங்களான “அந்த சத்தம்” என்பதுதான் அனைவருக்கும் நினைவில் வரும். இந்த சுடலை கதாபாத்திரமானது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணம் அவரின் தத்துரூபமான நடிப்பு தான்.

அதுமட்டுமின்றி அட்லீ இக்கத்தில் வெளிவந்த மெர்சலிலும் இவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது.

அக்ஷய் குமார்:

இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தமிழில் வெளிவந்த எந்திரன் 2.O படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. முதலில் இப்படத்தில் இவரை சாந்தமான நபரைப் போல் காட்டிருந்தாலும் கதையின் விறுவிறுப்பு தன்மை கேட்ப இறுதியில் வில்லன் கெட்டப்பில் வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினியையே ஒரு படி பின்னுக்கு தள்ளி விட்டது.

அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் அப்படத்தில் பெருமளவு பேசப்பட்டது. எந்திரன் படத்தின் முதல் பாகத்திலேயே ரஜினி ரோபோவாக காட்டப்பட்டு விட்டதால் இரண்டாம் பாகத்தில் அதனின் அடுத்த வெர்ஷன் என்று கூறினாலும் அதே ரோபோவாக தான் ரஜினியின் தோற்றம் இருந்தது. எனவே அவர் கெட்டப் கண்டு மக்கள் எந்த ஒரு பூரிப்பும் அடையவில்லை.

அருண் விஜய்:

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் அஜித்திற்கு இணையான கதாபாத்திரத்தை பெற்றிருப்பார். இளைஞர்கள் மத்தியில் இப்படத்தின் விக்டர் என்ற அருண் விஜயின் கதாபாத்திரம் தற்பொழுது வரை நீங்கா இடம் பிடித்துள்ளது. மேற்கொண்டு இப்படம் வெற்றி பெற்றதற்கு விக்டர் கதாபாத்திரமும் ஓர் முக்கிய காரணம் என்றே கூறலாம்.

அரவிந்த்சாமி:

தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நயன்தாரா என்ற பெரிய பிரபலங்கள் நடித்தாலும் அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் தான் இப்படத்தின் ஒட்டுமொத்த கதைக்களத்தையே விறுவிறுப்பாக கொண்டு செல்ல செய்தது. இவரின் நடிப்புக்காகவே இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அஜித்:

மங்காத்தா படத்தின் மூலம் தல அஜித் அவர்கள் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் படம் முழுவதும் மாஸாக காட்டப்பட்டு இருப்பார். விக்ரமையே மிஞ்சும் அளவிற்கு இவரின் நடிப்பானது இருக்கும்.இளைஞர்கள் மத்தியில் அவருடைய கெட்டப்பை பலரும் ரீமேக் செய்தனர்.

விஜய் சேதுபதி:

தற்பொழுது வெளிவரும் படங்களில் விஜய் சேதுபதி நெகட்டிவ் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். ஹீரோவாக காட்டாவிட்டாலும் வில்லனாகவே பெரும்பாலான மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். குறிப்பாக விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தின் இவரின் வசனம் மற்றும் ஸ்க்ரீன் பிளே என அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது. தொடர்ந்து விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தது அப்படத்தையே மெருகேற்றியது போல் காணப்பட்டது. அவருடைய எதார்த்தமான இந்த நடிப்பு தான் வில்லன் கதாபாத்திரத்தை கூட ரசிக்கும்படி செய்துள்ளது.

பகத் பாசில்:

உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் பகத்பாசலை தெரியாதவர்கள் கூட இப்படத்தின் இரத்தினவேல் கதாபாத்திரம் மூலம் அறிந்து கொண்டனர். இப்படத்தின் கதாநாயகனான உதயநிதியை மறந்து வில்லனான ரத்தினவேலை மக்கள் தூக்கி கொண்டாட ஆரம்பித்து விட்டனர். சமூக ஊடகங்களில் அவரவர் சாதியினை குறிப்பிட்டு இரத்தினவேல் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு வீடியோ போன்றவை மிகவும் விரலானது.இரத்தினவேல் கதாபாத்திரம் சமூக ஊடக்கத்தையே புரட்டி போட்டதென்று கூட சொல்லலாம்.